அரச அச்சக கூட்டுத்தாபனத்திற்கு ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி
அரச அச்சக கூட்டுத்தாபனத்திற்கு மூலப்பொருட்களை விநியோகிக்கும் வியாபாரிகளுக்கு கோடிக்கணக்கில் பணம் செலுத்த வேண்டியுள்ளதாக அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் தலைவி கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.
இயந்திரங்கள், வாகன உதிரி பாகங்கள், காரியாலய உபகரணங்கள் உட்பட பல பொருட்களை விநியோகிப்பவர்களுக்கே இவ்வாறு பணம் செலுத்த வேண்டியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
செலுத்த முடியாமல் போன கொடுப்பனவு
கடந்த வருடம் நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த பொருள் விநியோகிஸ்தர்களுக்கான கொடுப்பனவுகளை உரிய முறையில் செலுத்த முடியாது போனது.
அந்த நிலுவைத் தொகைகளை இந்த வருடம் வழங்க வேண்டிய கட்டாயம் இருப்பதாக கங்கானி லியனகே மேலும் தெரிவித்துள்ளார்.
மரண மற்றும் திருமண சான்றிதழ்களை அச்சிடுவதற்கு போதிய கடதாசிகள்
இருப்பதனால் இந்த ஆவணங்களில் அச்சு வேலைகள் எதுவித தடையின்றி
முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.