சுதந்திரக் கட்சியில் நீடிக்கும் முறுகல் : நீதிமன்றத்தை நாடும் உறுப்பினர்கள்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவி நீக்கம் செய்தமைக்கு எதிராக நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளதாக அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் (Mahinda Amaraweera) மகிந்த அமரவீர, பொருளாளர் லசந்த அழகியவண்ண (Lasantha Alagiyawanna) மற்றும் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க (Duminda Dissanayake) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றத்தில் இன்று (01.04.2024) முறைப்பாடு செய்யவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கடந்த 30ஆம் திகதி கட்சித் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
பதவி நீக்கம்
இதற்கமைய, கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து துமிந்த திஸாநாயக்க நீக்கப்பட்டு குறித்த பதவிக்கு கே.பி.குணவர்தன (KP Gunawardena) நியமிக்கப்பட்டார்.
மேலும், லசந்த அழகியவன்ன பொருளாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு குறித்த பதவிக்கு ஹெக்டர் பெத்மகே (Hector Bethmake) நியமிக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து, மகிந்த அமரவீர சிரேஷ்ட உப தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு சரத் ஏக்கநாயக்க (Sarath Ekanayake) அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சி செயற்குழு தெரிவித்திருந்தது.
இந்நிலையிலேயே தங்களை பதவி நீக்கம் செய்ததை கண்டித்து நீதிமன்றம் செல்லவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |