கொழும்பில் சுகபோக வாழ்க்கை வாழும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்! குற்றம் சாட்டும் சிங்கள அமைப்புக்கள்
யாழ். மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் சுகபோக வாழ்க்கையை அனுபவிப்பதாக சிங்கள ராவய அமைப்பு உள்ளிட்ட சிங்கள அமைப்புக்கள் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளன.
யாழில் உள்ள சிங்கள மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் குறித்து, கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கிளை அலுவலகத்தில் முறைப்பாடொன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிங்கள ராவய அமைப்பு உள்ளிட்ட சிங்கள அமைப்புக்களால் இந்த முறைப்பாடு தொடர்பான கடிதம் சபையின் அதிகாரியிடம் (07) கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிங்களவர்கள் பலவந்தாக வெளியேறவேண்டிய நிலை

இதன்போது இந்த அமைப்பினர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில்,
கறுப்பு ஜூலை இன அழிப்பை தொடர்ந்து யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் இருந்த சிங்களவர் பலவந்தமாக வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், இலங்கை பாதுகாப்பு படையினர் தமிழ் மக்களை துன்புறுத்துவதாக அவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு பொய்யானது. யாழ்ப்பாணத்தை விட அதிகளவான தமிழ் மக்கள் கொழும்பில் இருக்கின்றனர்.
அத்துடன், யாழ். மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் இருக்கிறார்கள். அவர்கள் இங்கு சுகபோக வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டு இனவாதத்தை தூண்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். சிங்கள மக்களின் மனித உரிமைகளும் இந்நாட்டில் பாதுகாக்கப்பட வேண்டும்.
தமிழ் மற்றும் சிங்களம் உள்ளிட்ட அனைத்து மக்களும் சமாதானத்துடன் வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்குமாறு நாம் அரசாங்கத்திடம் கோருவதாகவும் அந்த அமைப்பு அறிக்கை விடுத்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஹார்முஸ் நீரிணையை வலுக்கட்டாயமாக திறந்தால்... பிணங்கள் குவியலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri
விவாகரத்து வழக்கில் ட்விஸ்ட்.. கண்கலங்கி அழுத ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ், விஜயா! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam