இலங்கைக்கு அருகில் வந்தது சீன ஆய்வு கப்பல்
யுவான் வான்-5 என்ற சீன ஆராய்ச்சிக் கப்பல் தற்போது இலங்கையில் இருந்து 650 கடல் மைல் தொலைவில் தென்கிழக்கு கடலில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன், யுவான் வான்-5 கப்பலின் வேகமும் தடைபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யுவான் வான்-5, சீன விண்வெளி, செயற்கைக்கோள் மற்றும் ஏவுகணை ஆராய்ச்சி கப்பல், சமீபத்திய நாட்களில் தீவிர இராஜதந்திர பேச்சுக்கு உட்பட்டுள்ளது.
இந்தியாவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கப்பல் வருவதை ஒத்திவைக்குமாறு இலங்கை அரசாங்கம் அண்மையில் சீனாவிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
இலங்கை கடற்படைக்கு விமானம் வழங்கும் இந்தியா
ஆனால் இந்த கப்பல் இலங்கையை நோக்கி தொடர்ந்து பயணித்து வருவதாகவும், நாளை காலைக்குள் ஹம்பாந்தோட்டையை வந்தடைய முடியும் எனவும் இந்திய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டிருந்தன.
யுவான் வான்-5 கப்பல் இலங்கை வரும் பின்னணியில், கடல்சார் ஆய்வு மற்றும் பிறவற்றிற்கு பயன்படுத்தக்கூடிய டோரினர்-228 ரக விமானத்தை இலங்கை கடற்படைக்கு வழங்க இந்தியா முன்வந்துள்ளது.
இதேவேளை, சீன கப்பல் தமது துறைமுகத்திற்கு பிரவேசிப்பது தொடர்பில் இதுவரை எந்தவித அறிவிப்பும் விடுக்கப்படவில்லை என ஹம்பாந்தோட்டை துறைமுக நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார். நாட்டிற்கு கப்பல் ஒன்று பிரவேசிக்குமாயின் அதற்கான அனுமதி கோரப்பட்டிருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 5 நாட்கள் முன்

இந்தியாவிடம் பின்னடைவு... கடும் நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான் எடுத்துள்ள அந்த முடிவு News Lankasri
