விவாகரத்து சட்டத்தில் மாற்றம்
விவாகரத்து சட்டத்தை முற்றாக நீக்கிவிட்டு, தவறு இல்லாத விவாகரத்து என்ற புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச (Wijeyadasa Rajapakshe) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் விளக்கம் தெரிவிக்கையில்,
"தவறு இல்லாத விவாகரத்து சட்டமூலம் தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டமூலத்தின் மூலம், நீண்ட விசாரணையின்றி விவாகரத்து வழக்குகளில் தீர்ப்பு வழங்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் வழங்கப்படுகின்றது.
விவாகரத்து வழக்குகள்
புதிய பரஸ்பர அங்கீகாரம், பதிவு செய்தல் மற்றும் வெளிநாட்டு தீர்ப்புகளை நடைமுறைபடுத்துதல் சட்டமூலம், விவாகரத்து வழக்குகளில் வெளிநாட்டு நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்புகளை இலங்கை நீதிமன்றங்கள் அங்கீகரிக்க அனுமதிக்கும்.
நேற்று நிறைவேற்றப்பட்ட சிவில் நடைமுறைச் சட்டம் (திருத்தம்) சட்டமூலத்தில் மின்னஞ்சல், வாட்ஸ்அப் போன்ற மின்னணு வழிமுறைகள் மூலம் அறிவிப்பதற்கான விதிமுறைகள் அடங்கியுள்ளன.
மேலும், விவாகரத்து வழக்குகளில் மற்ற தரப்பினர் வேறொரு நாட்டிற்கு குடிபெயரும் போது, பதில் அளித்தவர்களுக்கு தெரியபடுத்தாமல் இருப்பது போன்ற நடைமுறைச் சிக்கல்கள் எழுந்துள்ளன” என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |