கொழும்பில் மர்மமான முறையில் உயிரிழந்த வர்த்தகர்! சந்தேகநபர்கள் சிக்கினர்
பத்தரமுல்ல - பெலவத்த பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றின் நீச்சல் தடாகத்தில் இருந்து அண்மையில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலதிபரின் மரணம் தொடர்பில் பிரதான சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் கணவன் மற்றும் மனைவி என தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் கந்தானை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்களான தம்பதியினர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 02 ஆம் திகதி பத்தரமுல்லை பெலவத்தை பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றின் நீச்சல் தடாகத்தில் இருந்து வீட்டின் உரிமையாளரான வர்த்தகர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
பொலிஸாரின் தகவல்
உயிரிழந்தவர் பிரபல ஆடையகம் ஒன்றின் உரிமையாளராவார். குறித்த தொழிலதிபர் கடந்த மாதம் 31 ஆம் திகதி அந்த வீட்டிற்கு செல்வதாக தனது சகோதரியிடம் கூறியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆனால் அவர் மீண்டும் திரும்பாததால் விசாரணையில் அவரது உடல் இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மரணத்துக்கான சரியான காரணம் இதுவரை தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan

Optical illusion: படத்தில் நூற்றுக்கணக்கான “7” களில் மறைந்திருக்கும் ”9” ஐ கண்டுபிடிக்க முடியுமா? Manithan
