யாழில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து பேருந்து விபத்து
யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்கு இலக்காகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் நேற்று (13.01.2023) பதிவாகியுள்ளது.
இதன்போது சிறுப்பிட்டி பகுதியில் உள்ள வாகனம் திருத்தும் நிலையத்துக்குள் குறித்த பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து அங்கு நின்ற பேருந்துகளை மோதியுள்ளது.

இதனால் வாகனத்தின் முன்பக்கம் பலத்த சேதங்களுக்கு உள்ளாகி உள்ள போதும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு
மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதான வீதியில் நேற்று (13.01.2023) இலங்கை போக்குவரத்துசபைக்கு சொந்தமான பேருந்து பாரிய விபத்தில் சிக்கியுள்ளது.
குறித்த பேருந்து பனை மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் இரண்டு பயணிகள் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பேருந்து முன்பக்க பகுதி கடுமையான சேதமடைந்துள்ளதுடன் இது
தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக போக்குவரத்து பொலிஸார்
முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மரண வீட்டில் அரசியல்.. 3 நாட்கள் முன்
பிரித்தானியாவை விட்டு வெளியேறிய 45,000 இந்திய மாணவர்கள்: எச்சரிக்கும் கல்வித்துறையினர் News Lankasri
Bigg Boss: உங்களுக்கு எத்தனை தடவை சொல்றது? மைக்கை மறைத்து பண்ணாதீங்கனு... கொந்தளித்த பிக்பாஸ் Manithan