களுவாஞ்சிக்குடியில் விபத்தில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு! 4 பேர் படுகாயம்
களுவாஞ்சிக்குடி பிரதான வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து சிறுவர்கள் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (22.08.2026) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் விபத்து
கோட்டை கல்லாறைச் சேர்ந்த 17 வயதுடைய ஜெகநாதன் கிஷோர் என்ற சிறுவனே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதியில் வீதியை கடப்பதற்காக சம்பவ தினமான நேற்று இரவு 9.30 மணியளவில் 3 சிறுவர்கள் பாதை ஓரத்தில் நின்று கொண்டிருந்த போது வீதியில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை மீறி வீதியோரமாக நின்ற சிறுவர்கள் மீது மோதியுள்ளது.

இதில் மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்ற சிறுவன் சம்பவ இடத்திலே உயிரிழந்ததுடன் அதில் பயணம் செய்தவர் மற்றும் வீதியோரத்தில் நின்ற 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.