கொரோனா தொற்றுக்கு உள்ளான யாசகர்
கொரோனா தொற்றாளர் என உறுதிப்படுத்தப்பட்ட யாசகர் ஒருவர் பதுளை முதியங்கனை ராஜமஹ விகாரைக்கு எதிரில் உள்ள நடைபாதையில் யாசகம் பெற்றுக்கொண்டிருந்த போது பொது சுகாதார அதிகாரிகளால் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இந்த கொரோனா தொற்றாளர் சுவாச நோய் காரணமாக சிகிச்சை பெற்றுக் கொள்ள நேற்று பதுளை வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் இருந்து திரும்பி சென்ற பின்னர், 60 வயதான இந்த நபர் கொரோனா தொற்றாளர் என்பது PCR பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர்கள் அந்த நபரை தேடிச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் கொரோனா தொற்றாளரான நபரும், மூன்று பெண்கள் மற்றும் மேலும் ஒரு நபரையும் பொது சுகாதார அதிகாரிகள் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.
கொரோனா தொற்றாளரான யாசகர் சிகிச்சைக்காக கஹாகொல்ல சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் ஏனையோர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 8 மணி நேரம் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
