யாழில் சரமாரி வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞருக்கு கோவிட் தொற்று உறுதி
வன்முறைக் கும்பலின் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பயனின்றி நேற்று முன் தினம் மாலை உயிரிழந்த இளைஞருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.ஶ்ரீபவானந்தராஜா தெரிவித்துள்ளார்.
குறித்த இளைஞருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையினூடாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய அடுத்தகட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தாக்குதலுக்கு இலக்கான மேலும் மூவர் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றதாக தெரியவருகிறது.
அத்துடன், வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டவர்கள் யார் என்பது குறித்து இதுவரை கண்டறியப்படாத நிலையில் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் யாழ். குருநகரைச் சேர்ந்த ஜெரன் (வயது 24) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.




