இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய ரஷ்ய தம்பதி - மோசமாக தாக்கப்பட்ட இளம் பெண்
கண்டி ஹந்தான பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் ரஷ்ய இளம் பெண்ணை கடுமையாக தாக்கிய சந்தேகத்தின் பேரில் ரஷ்ய இளைஞன் ஒருவரை கண்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இருவருக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. தாக்குதலுக்கு உள்ளான 32 வயதான Nadezda Chumk என்ற இளம் பெண் சிகிச்சைக்காக பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரஷ்ய தம்பதி தாக்குதல்
தாக்குதலுக்கு உள்ளான யுவதி கடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதி இலங்கைக்கு வந்துள்ளார். அவரது விசா அடுத்த ஆண்டு ஜனவரி 31ஆம் திகதியுடன் காலாவதியாகிவிடும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரிடம் கடவுச்சீட்டு இல்லை எனவும், அவர் நாட்டிற்கு வந்த திகதி அல்லது வீசா காலாவதியான திகதி போன்றவற்றைக் கண்டறிய முடியாததால் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 19 மணி நேரம் முன்

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
