நகரசபை தலைவரின் துப்பாக்கியை கொள்ளையிட்ட முச்சக்கர வண்டி சாரதி
நாவலப்பிட்டி நகரசபை தலைவர் அமல் பிரியங்கர மற்றும் அவரது சாரதி ஆகியோரை கொஸ்வத்தை சந்திக்கு அருகில் வைத்து தாக்கி விட்டு, கைத்துப்பாக்கியை கொள்ளையிட்டு சென்றதாக கூறப்படும் முச்சக்கர வண்டி சாரதியை கைது செய்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைத்துப்பாக்கி சந்தேக நபர் வசித்து வரும் தெற்கு தலங்கம பிரதேசத்தில உள்ள வீட்டின் மேல் மாடியில் இருந்த நிலையில் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கடந்த மே 9 ஆம் திகதி நடந்த தாக்குதல் சம்பவம்
கடந்த மே மாதம் 9 ஆம் திகதி நகரசபை தலைவர் கெப் வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த போது, அதனை நிறுத்தி, வாகனத்தையும் நகரசபை தலைவர் மற்றும் சாரதியை தாக்கி விட்டு, அவர்களிடம் இருந்து 5 லட்சம் ரூபா பணத்தையும் கைத்துப்பாக்கியையும் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை நடத்த வந்தனர்.
29 வயதான முச்சக்கர வண்டி சாரதி
இதற்கு அமைய பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர். 29 வயதான முச்சக்கர வண்டி சாரதியே இவவாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார். தலங்கம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அனில் ஜயந்தவின் ஆலோசனைகளுக்கு அமைய விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது.

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan
