புதுக்குடியிருப்பில் 26 வயதுடைய இளைஞன் கோவிட் தொற்றால் மரணம்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பகுதியில் நேற்றையதினம் ஒருவர் கோவிட் தொற்றினால் மரணமடைந்துள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் சுகவீனம் காரணமாக மூங்கிலாறு வைத்தியசாலையில் நேற்று (12) அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மரணமடைந்திருந்தார்.
மரணமடைந்தவரின் சடலத்தை இன்று (13) புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டு அவரிற்கு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
மூங்கிலாறு பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞனே இவ்வாறு மரணமடைந்துள்ளவராவார்.
இதனையடுத்து மரணமடைந்த நபரை எரியூட்டுவதற்கான நடவடிக்கைகளை சுகாதார பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த மரணத்துடன் புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பகுதியில் இதுவரை 16 மரணங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 17 மணி நேரம் முன்
வீட்டுப் பிரச்சனைக்கு சிந்தாமணி தான் காரணம் என தெரிந்ததும் அதிரடி காட்டிய விஜயா... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
ஈஸ்வரி குறித்து பார்கவி சொன்ன விஷயம், ஆடிப்போன குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்களுக்கு சன் டிவி வெளியிட்ட குட் நியூஸ்.... என்ன தெரியுமா? Cineulagam
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam