கடந்த ஆண்டு வடக்கு மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்து வெளியான தகவல்

Sri Lanka Northern Province of Sri Lanka
By Kajinthan Jan 02, 2026 10:06 AM GMT
Report

2025ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக வடக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், 98 சதவீதத்துக்கும் அதிகமான நிதியைத் வினைத்திறனாகச் செலவு செய்து, இலங்கையின் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் வடக்கு மாகாண சபை முதலிடத்தைப் பிடித்துள்ளதாக வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிதி) ஆர்.சிவரூபன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் 2026ஆம் ஆண்டுக்கான கடமை ஆரம்பிக்கும் விசேட நிகழ்வு, ஆளுநர் செயலகத்தில் நேற்று (01.01.2026) காலை நடைபெற்றது.

பெரும் பரபரப்புக்கு மத்தியில் தையிட்டிக்கு விஜயம் செய்துள்ள நயினாதீவு விகாராதிபதி

பெரும் பரபரப்புக்கு மத்தியில் தையிட்டிக்கு விஜயம் செய்துள்ள நயினாதீவு விகாராதிபதி

அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க

இந்நிகழ்வில் கலந்து கொண்டு அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்த ஆளுநர், 2025ஆம் ஆண்டில் மாகாணத்தின் நிதி முன்னேற்றத்தில் மிகச் சிறப்பான நிலையை அடைவதற்கு அர்ப்பணிப்புடன் ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு வடக்கு மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்து வெளியான தகவல் | 98 Percent Funds Allocated To North Spent

தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர், கடந்த 2024ஆம் ஆண்டு எமது மாகாணத்துக்கு 4 பில்லியன் ரூபாவும், 2025ஆம் ஆண்டு 8 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்ட நிலையில், இம்முறை 2026ஆம் ஆண்டுக்காக அண்ணளவாக 10 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நிதி ஆணைக்குழுவும் ஜனவரி மாதத்திலிருந்தே எமது திட்டங்களைச் செயற்படுத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

எமக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் ஊடாகச் செயற்படுத்த முடியாத மேலதிகத் திட்டங்களுக்குரிய நிதியை, மத்திய அரசின் நிரல் அமைச்சுக்களிடம் கோருவதற்கு எமக்கு வாய்ப்புள்ளது.

குறிப்பாக, மாகாண சபைகளுக்கு நிரல் அமைச்சுக்களின் நிதியை ஒதுக்கீடு செய்யுமாறு மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் பணிப்புரை விடுத்துள்ளார்.

எனவே, இவ்வாண்டில் எம்மால் முன்னரை விடக் கூடுதலான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க முடியும் என நான் உறுதியாக நம்புகின்றேன்.

மக்களின் வாழ்க்கைத் தரத்தில் 

எமது மாகாணத்தில் சில குறிப்பிட்ட பிரதேசங்கள்த் தொடர்ச்சியாக வெள்ளப் பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றன. அந்த மக்கள் ஒவ்வொரு தடவையும் பாதிக்கப்படுவதை நாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

எனவே, அவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ள பிரதேசங்களில் எதிர்காலத்தில் வெள்ளப் பாதிப்பை முற்றாக இல்லாதொழிப்பது அல்லது குறைப்பது எவ்வாறு என்பது தொடர்பில் இவ்வாண்டில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.

கடந்த ஆண்டு வடக்கு மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்து வெளியான தகவல் | 98 Percent Funds Allocated To North Spent

சொல்வது சுலபம். ஆனால், அதனை நடைமுறைப்படுத்துவது கடினம். நாம் இங்கிருந்து கொள்கைகளை வகுத்தாலும், அதனைத் களத்தில் செயற்படுத்துபவர்கள் நீங்களே.

அந்தச் செயற்பாடுகளின்போது நீங்கள் பெற்ற அனுபவங்களே எதிர்கால வெற்றிக்கு வழிவகுக்கும். பிரதம செயலாளர் முதல் கள உத்தியோகத்தர்கள் வரை அனைவரினதும் கூட்டு முயற்சியாலேயே இம்முறை எம்மால் நிதிப் பயன்பாட்டில் தேசிய ரீதியில் சிறப்பான அடைவை எட்ட முடிந்துள்ளது.

இருப்பினும், நாம் வெறும் நிதிப் புள்ளிவிவரங்களை மட்டும் பார்க்காமல், இத்திட்டங்கள் மக்களின் வாழ்க்கைத் தரத்தில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன என்பதை நிச்சயம் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

2026ஆம் ஆண்டுக்குரிய வேலைத்திட்டங்கள்

பிரதிப் பிரதம செயலாளர் (நிதி) ஆர்.சிவரூபன் தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் நூறு சதவீதக் கட்டு நிதியையும் நாம் திறைசேரியிடமிருந்து பெற்றுள்ளோம்.

கடந்த 30ஆம் திகதி நள்ளிரவு வரையில் 98 சதவீதத்துக்கும் அதிகமான நிதியைச் செலவு செய்துள்ளோம்.

கடந்த ஆண்டு வடக்கு மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்து வெளியான தகவல் | 98 Percent Funds Allocated To North Spent

பௌதீக முன்னேற்றத்தைப் பொறுத்தவரையில் நாம் 100 சதவீத இலக்கை எட்டியுள்ளோம். இந்த அடைவின் மூலம் இலங்கையிலுள்ள ஏனைய மாகாணங்களில் நாமே முன்னிலையில் உள்ளோம்.

இந்த வெற்றியைத் தக்கவைக்க, 2026ஆம் ஆண்டுக்குரிய வேலைத் திட்டங்களில் கொள்வனவு தொடர்பான பணிகளை ஆரம்பத்திலேயே தொடங்குவது சிறப்பாக அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிகழ்வில் மாகாணத்தின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். 

யாழில் கடற்கரையில் கரையொதுங்கிய மர்மப் பொருள்

யாழில் கடற்கரையில் கரையொதுங்கிய மர்மப் பொருள்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

கரவெட்டி, கலிஃபோர்னியா, United States

15 Feb, 2026
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி, Toronto, Canada

14 Feb, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Drancy, France

18 Jan, 2026
நன்றி நவிலல்

நவாலி, மட்டுவில் தெற்கு, Toronto, Canada, Ajax, Canada

19 Jan, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்லாரை, சாவகச்சேரி

16 Feb, 2026
மரண அறிவித்தல்

தச்சன்தோப்பு, கொழும்பு

15 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சுழிபுரம், Jaffna, Toronto, Canada

17 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Heathrow, United Kingdom

18 Feb, 2025
நன்றி நவிலல்

வன்னிவிளாங்குளம், சென்னை, India, Zürich, Switzerland

14 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், மானிப்பாய், மட்டக்களப்பு, தெஹிவளை

16 Feb, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெளுக்குளம், Harrow, United Kingdom

16 Feb, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
அகாலமரணம்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, கனடா, Canada

16 Feb, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

18 Feb, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, கொழும்பு 6

27 Feb, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கொழும்பு

15 Jan, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US