அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு! 9 பேர் உயிரிழப்பு:பலர் காயம்
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் இன்று (22.01.2023) நடைபெற்ற சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின் போதே இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சீன வழக்கப்படி இன்று (22.01.2023) புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.
லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் துப்பாக்கிச்சூடு
இந்நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மாண்டெரி பார்க் பகுதியில் உள்ள ஒரு கேளிக்கை விடுதியில் இன்று சீன புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அப்போது, புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சூடில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், படுகாயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
குறித்த துப்பாக்கிச்சூடு குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் அரிய இரட்டை ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan