வெளிநாடொன்றில் துப்பாக்கிச் சூடு! 9 பேர் பலி: பலர் காயம்
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் பகுதியில் உள்ள மதுபானக் கடை அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பவமானது இன்று(21.12.2025) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, இந்த துப்பாக்கிச் சூட்டில் பத்து பேர் காயமடைந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
துப்பாக்கிச் சூடு
இரண்டு கார்களில் வந்த சுமார் 12 பேர் கொண்ட அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி குழு துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும் சந்தேநபர்களைக் கைது செய்ய அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, தென்னாப்பிரிக்கா உலகிலேயே அதிக கொலை விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 13 மணி நேரம் முன்
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan