தாய் ஒருவரை கொடூரமாக தாக்கிய கும்பல் - பொலிஸார் அதிரடி நடவடிக்கை
குருணாகல் கொக்கரேல்ல, மெதாலந்த பகுதியில் தாய் ஒருவரை கொடூரமாக தாக்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அது தொடர்பில் 9 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் 16 ஆம் திகதி மெதாலந்த பகுதியில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
தாக்குதல் சம்பவம்
சம்பவத்தை அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியதை அடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.
தாக்குதலின் பின்னர் சந்தேகநபர்கள் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றிருந்தனர்.
எனினும், விசாரணைகளை மேற்கொண்ட கொக்கரேல்ல பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய 9 பேரையும் கைது செய்தனர்.
நீண்ட காலமாக உறவினர்களுக்கு இடையே நிலவி வந்த குடும்பத் தகராறே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன் வெளியான காணொளி: மறைக்கப்படும் உண்மை - சரத் வீரசேகர விடுத்துள்ள எச்சரிக்கை
Checkup சென்ற மயிலுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி, என்ன நடந்தது... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri
அந்த கடையை கொண்டுபோய் சுடுகாடு பக்கத்துல வைங்க.. CM விஜய்க்கு நடிகர் பார்த்திபன் கொடுத்த ஐடியா Cineulagam