வறிய மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக 85 ஆயிரம் மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது - வியாழேந்திரன் (Photos)
2022 ஆம் ஆண்டில் வறிய மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக மாத்திரம் 85 ஆயிரம் மில்லியன் நிதி எமது அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் (S.Viyalendiran) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த தேர்தலில் ஆளும் தரப்பு சார்பில் போட்டியிட்ட நான் உட்பட எமது மாவட்டத்தில் இரண்டு பேரை எமது மக்கள் தங்களது பொன்னான வாக்குகளை வழங்கி தேர்ந்தெடுத்து ஆளுந்தரப்பு சார்பில் நாடாளுமன்றத்திற்கு அனுப்பியதன் பயனாலேயே இன்று எமது மக்களுக்காக இந்த அரசாங்கத்தின் ஊடாக பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை நாம் ஆற்றிவருகின்றோம்.
எதிர்காலத்திலும் வாழ்வாதார உதவி திட்டங்கள் உள்ளிட்ட எமது மக்களுக்கு தேவையாகவுள்ள அனைத்து விதமான தேவைப்பாடுகளையும் பெற்றுக்கொடுப்பதற்காக முன்னின்று செயற்படுவோமென்றும்.
இந்த அரசாங்கம் ஒருபோதும் இல்லாதவாறு எதிர்வரும் ஆண்டில்
வறிய மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக மாத்திரம் 85 ஆயிரம் மில்லியன் நிதியை ஒதுக்கியுள்ளதெனவும் தெரிவித்துள்ளார்.










