இலங்கையில் தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள 82 கோவிட் நோயாளிகள்
இலங்கையில் 82 கோவிட் நோயாளிகள் தற்போது மருத்துவமனைகளில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் துணை இயக்குநர் கலாநிதி ஹேமந்த ஹேரத் இன்று இதனை தெரிவித்துள்ளார்.
கோவிட் நோயாளிகளுக்காக 191 சிகிச்சை மையங்களில் 29,530 கட்டில்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.அவற்றில் 26,243 கட்டில்கள் தற்போது நோயாளிகளால் நிரப்பப்பட்டுள்ளன.
நோயாளிகளை அனுமதிக்க இன்னும் 3,287 கட்டில்களே மட்டுமே எஞ்சியுள்ளன. இருப்பினும் சிறப்பான முன் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் நோயாளிகளின் எண்ணிக்கையை மேலும் குறைக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது, நாளாந்தம் சராசரியாக 2,800 தொற்றாளிகள் பதிவாகின்றனர். எனினும் புதிய எண்ணிக்கை வெளியேற்றப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையுடன் ஈடு செய்யப்படுவதால் நிலைமை சீர் செய்யப்படுவதாக ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் மேலும் 9,000 கட்டில்களை இந்த அமைப்பில் சேர்க்கும் திட்டங்களும் உள்ளன.எனவே, நோயாளிகளுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தற்போது, சராசரியாக 1,900 கோவிட் நோயாளிகள் குணமடைந்து
மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள் என்றும் வைத்தியர் ஹேமந்த
ஹேரத் குறிப்பிட்டார்.