தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 816 பேர் சிக்கினர்
நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 816 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 77 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதற்கமைய குறித்த குற்றச்சாட்டில் இதுவரை கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 73894ஆக உயர்வடைந்துள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் மற்றும் உள்நுழையும் 13 இடங்களில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி நேற்று 263 வாகனங்களில் பயணித்த 142 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
அத்துடன் மேல் மாகாணத்தில் நேற்று காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை 285 பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது அனுமதிப்பத்திரமின்றி 865 வாகனங்களில் பயணித்த 1,438 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan
