மே மாதத்தில் மாத்திரம் 806 கோவிட் மரணங்கள்
கடந்த மே மாதத்தில் மாத்திரம் இலங்கையில் கோவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக 806 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஏப்ரல் மாத இறுதி வரை இலங்கையில் கோவிட் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 678 ஆக காணப்பட்டதுடன் அது மே மாதத்தில் ஆயிரத்து 484 ஆக அதிகரித்தது.
அத்துடன் மே மாதத்தில் மாத்திரம் 78 ஆயிரத்து 218 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
இதற்கு அமைய இநத மாதத்தில் அடையாளம் காணப்பட்டவர்களில் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 1.03 வீதமாகும்.
மே மாதத்திற்கு முன்னர் இலங்கையில் கோவிட் மரணங்களில் எண்ணிக்கை குறைந்த மட்டத்தில் காணப்பட்டது.
அதேபோல ஏப்ரல் 14 தமிழ் - சிங்கள புத்தாண்டில் இருந்து இதுவரையான காலத்திற்குள் மொத்தமாக 880 கோவிட் மரணங்கள் சம்பவித்துள்ளன.
இந்த காலப்பகுதியில் மொத்தமாக 90 ஆயிரத்து 627 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.