இலங்கையில் பதிவான கோவிட் மரணங்கள் தொடர்பில் வெளியான தகவல்கள்!
கோவிட் தொற்றுநோயால் இன்று வரை இறந்த 7,587 பேர் குறைந்தபட்சம் ஒரு அளவு தடுப்பூசியைக்கூட பெறவில்லை, இது அனைத்து இறப்புகளில் 80.7% ஆகும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஷெனல் பெர்னாண்டோ கூறியுள்ளார்.
தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் பெற்றவர்கள் மத்தியில் இருந்து, 388 இறப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளன, இது மொத்த இறப்புகளில் 4.1% ஆகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தரவைப் பார்க்கும் எவருக்கும் தடுப்பூசியின் முக்கியத்துவம் தெளிவாகப் புரியும் என்று அவர் கூறியுள்ளார்.
எனவே, பெற்றோர், பெரியவர்கள் அல்லது உறவினர்கள் 60 வயதுக்கு மேல் இருந்தும், இதுவரை தடுப்பூசி போடாதவர்களுக்கு, விரைவில் கோவிட் தடுப்பூசி போட ஊக்குவிக்குமாறு வைத்தியர் பெர்னாண்டோ வலியுறுத்தியுள்ளார்.
Bigg Boss: அன்று பிக்பாஸாக இருந்தவர் இன்று போட்டியாளராக வந்தது தெரியுமா?... இதுவரை தெரிந்திடாத உண்மை Manithan
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam