கோர விபத்தில் 8 வயது சிறுமி பலி! தந்தையின் நடந்த கண்முன்னே துயரம்
குருநாகல் மாவட்டம், கல்கமுவை பகுதியில் தந்தையுடன் வீதியில் நடந்து சென்ற 8 வயது சிறுமி ஹயஸ் வாகனம் மோதி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்தத் துயரச் சம்பவம் நேற்று(11) ஞாயிற்றுக்கிழமை மாலை குருநாகல் மாவட்டம், கல்கமுவை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
பரிதாப மரணம்
சிறுமி தனது தந்தையுடன் வீதியின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்த போது, அவர்களின் பின்னால் அதிவேகமாக வந்த ஹயஸ் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் மீது மோதியுள்ளது.

இதில் சிறுமி கடுமையாகக் காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்தில் சிறுமியின் தந்தை சிறுகாயங்களுடன் உயிர்தப்பியுள்ளார்.
அவர் உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றார்.
மேலதிக விசாரணை
அவரது நிலை ஆபத்தானதல்ல என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் இடம்பெற்ற உடனேயே பொலிஸார் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து சென்று விசாரணைகளை ஆரம்பித்தனர்.

விபத்துக்குக் காரணமான ஹயஸ் வாகனம் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்டுள்ளதுடன், வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.