எட்டு ரயில் சேவைகள் மீள் அறிவித்தல் வரை நிறுத்தம்! - வெளியாகியுள்ள விசேட அறிவிப்பு
மண்சரிவு எச்சரிக்கை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக ரயில் தண்டவாளத்தின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதால், கொழும்பு கோட்டைக்கும் கண்டிக்கும் இடையிலான எட்டு ரயில் சேவைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
ரயில்வே திணைக்களம் இதனை தெரிவித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மோசமான வானிலைக்கு மத்தியிலும் ஊழியர்கள் தற்போது பாதையை புனரமைக்க முயற்சித்து வருவதாக இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் கசுன் சாமர தெரிவித்தார்.
"ரயில்களை விரைவில் வழமைக்கு கொண்டு வர எதிர்பார்க்கிறோம்," என்று அவர் கூறினார். “கண்டி பாதையில் உள்ள தடங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு கோட்டை - பதுளை பிரதான பாதையில் ரம்புக்கனைக்கும் கடிகமுவவிற்கும் இடையில் ரயில் பாதையின் இரண்டு பகுதிகள் மண்சரிவினால் சேதமடைந்துள்ளது. மேலும் ரயில் பாதையில் பாரிய பாறைகள் சரிந்து விழுந்ததால் தண்டவாளம் சேதமடைந்துள்ளது.
மண்சரிவினால் பாதிக்கப்பட்ட சில பகுதிகளை புனரமைப்பதற்கு பல நாட்கள் ஆகலாம் எனவும், இந்த பாதை புனரமைக்கப்படும் வரை பிரதான பாதை கொழும்பு கோட்டையில் இருந்து ரம்புக்கனை வரை மட்டுமே ரயில் சேவை முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
மதுரங்குளிய துணை மின் நிலையத்திற்கு அருகிலுள்ள வீதி மற்றும் பங்கதெனிய புகையிரத நிலையத்திற்கு அண்மித்த வீதியில் தெதுரு ஓயா பெருக்கெடுத்து ஓடுவதால், கொழும்பு கோட்டையில் இருந்து புத்தளம் பாதையில் சிலாபம் வரை மட்டுப்படுத்தப்பட்ட புகையிரத சேவைகள் நீர் குறையும் வரை இடம்பெறும் என அவர் மேலும் தெரிவித்தார்.
you may like this video...

பதினாறாவது மே பதினெட்டு 21 மணி நேரம் முன்

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri
