நுவரெலியாவில் உணவு ஒவ்வாமையினால் 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி..!
நுவரெலியாவில் கிறிஸ்தவ ஆலயம் ஒன்றில் வழங்கப்பட்ட உணவை உட்கொண்டுட 8 பேர் திடீர் ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று(31.05.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 பேர் வைத்தியசாலையில் அனுமதி
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருதாவது,
நுவரெலியாவில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் ஒன்றில் வழங்கப்பட்ட முட்டை அடங்கிய சோறு பொதியொன்றை குறித்த 8 பேரும் உட்க் கொண்டுள்ளனர்.

அதன் பின்னர், அவர்களுக்கு வாந்தி, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் தென்பட்டதையடுத்து நுவரெலியா மாவட்ட பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, தற்போது உடல்நிலை சற்று தேறிவருவதாகவும் ஆபத்தான எந்தவித பாதிப்பும் இல்லை எனவும் வைத்திய சாலையில் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.