11 வயது சிறுவனால் ஏற்பட்ட கோர விபத்து: 8 தேரர்கள் உயிரிழப்பு -13 பேர் படுகாயம்
தாய்லாந்து - முக்தஹான் மாகாணத்தில், பாதயாத்திரைக்கு சென்ற தேரர்கள் மீது 11 வயது சிறுவன் கெப் ரக வாகனத்தை ஏற்றியதில் எட்டு தேரர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து இன்று(02.07.2026) இடம்பெற்றுள்ளதுடன், விபத்தில் மேலும் 13 தேரர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், விபத்து முவாங் மாவட்டத்தின் பான் நா சி நுவான் என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் சம்பவ இடத்திலேயே 5 தேரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
13 பேர் படுகாயம்
இதனைத் தொடர்ந்து, படுகாயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட தேரர்களில் மேலும் மூவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், 13 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், விபத்தை ஏற்படுத்திய வாடகைக் காரை 11 வயது சிறுவன் ஓட்டிச் சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் குறித்த சிறுவன் தனது பெற்றோர் மற்றும் பாதுகாவலர் அனுமதியின்றி வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை தாய்லாந்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
you may like this..
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri