இலங்கையர்களை ஏமாற்றும் வெளிநாட்டவர்கள் உட்பட 8 பேர் கைது
பணம் மோசடி செய்யும் நடவடிக்கையில் ஈடுபடும் வெளிநாட்டவர்கள் 6 பேர் உட்பட 8 பேர் களனி குற்ற விசாரணை பிரிவினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து சுங்க பிரிவிற்கு வந்துள்ள பார்சல்களை விடுவிப்பதாக கூறி மோசடியான முறையில் பணம் கொள்ளையடிக்கும் நடவடிக்கையில் இந்த வெளிநாட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அதற்கமைய இவ்வாறு மோசடியான முறையில் பெற்றுக்கொள்ளப்பட்ட 17 லட்சம் ரூபாய் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பத்தரமுல்ல பிரதேசத்தை சேர்ந்த இலங்கையில் கணக்கு வைத்துள்ள இலங்கையர் ஒருவர் முதல் முறையாக கைது செய்யப்பட்டதாக களனி குற்ற விசாரணை பிரிவு தெரிவித்துள்ளது.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய கல்கிஸ்ஸ பிரதேசத்தில் தங்கியிருந்த 6 வெளிநாட்டவர்கள் மற்றும் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களில் நைஜீரிய நாட்டவர்கள் நால்வரும் ரஷ்ய நாட்டவர் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் சந்தேக நபர்களிடம் இருந்து 25 கிராம் ஹெரோயினும் கண்டுபிடிக்க்பட்டதாக களனி குற்ற விசாரணை பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




