இலங்கையில் ஒரே நாளில் போதைப்பொருள்களுடன் சிக்கிய 700இற்கும் மேற்பட்டோர்...
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாட்டில் போதைப்பொருளை தடுக்கும் நோக்கிலான “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ் நேற்று முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் சுமார் 788 பேர் போதைப்பொருள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 16 பேரும், சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளுக்கமைய 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சோதனைகள்
இதேவேளை, 805 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், 7 பேர் புனர்வாழ்வு நிலையத்துக்கு அனுப்பி வைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின்போது சிக்கிய சந்தேகநபர்கள் வைத்திருந்த போதைப்பொருட்களையும் இதன்போது பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அதற்கமைய, சந்தேகநபர்களிடமிருந்து, 252 கிராம் ஹெரோயின், 347 கிராம் ஐஸ், 582 கிலோகிராம் 751 கிராம் கஞ்சா, 50 கஞ்சா செடிகள், 140 கிராம் குஷ் ரக போதைப்பொருள், 25 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 1,701 போதை மாத்திரைகள், 134 கிராம் 600 மில்லிகிராம் மதனமோதகம் மற்றும் 3 கிலோகிராம் 288 கிராம் மாவா போதைப்பொருள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
நான் சிவனேனு தானடா இருந்தேன்: நயன்தாரா 'நார்மல் people கிடையாது' ட்ரோல் பற்றி விக்னேஷ் சிவன் விளக்கம் Cineulagam