தரக் குறைவான நிலக்கரி இறக்குமதியால் 787 கோடி ரூபா நட்டம்
நாட்டில் தரக் குறைவான நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதனால் 787 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
எட்டு கப்பல்களில் கொண்டு வரப்பட்ட நிலக்கரியினால் இவ்வாறு நட்டம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
முதலில் கொண்டு வரப்பட்ட 4 கப்பல்களை விடவும் இரண்டாது தடவையாக கொண்டு வரப்பட்ட 4 கப்பல்களின் நிலக்கரியின் தரம் குறைவானது என தெரிவித்துள்ளார்.

தற்பொழுது 9ம் கப்பலில் கொண்டு வரப்பட்ட நிலக்கரியை இறக்குமதி செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
15 கப்பல்களில் நிலக்கரி கொண்டு வரப்பட உள்ளதகாவும் இவ்வாறு தரம் குறைந்த நிலக்கரிகளை இறக்குமதி செய்து நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் பயன்படுத்துவதனால் இயந்திரங்களுக்கு சேதம் ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஓரு இயந்திரம் இயங்காமல் போனால் அதனை திருத்துவதற்கு ஆறு மாத காலம் தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி தொடர்பில் மூன்று பேர் மீது குற்றம் சுமத்தப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தரம் குறைந்த நிலக்கரி பயன்பாட்டினால் இழக்கப்படும் மின்சாரத்தை எரிபொருள் ஊடாக பெற்றுக் கொண்டால் பாரியளவு செலவு அதிகரிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான பிரச்சினைகள் காரணமாக மின்சாரக் கட்டணத்தை 13.5 வீதத்தினால் உயர்த்த முயற்சிக்கப்படுவதாகவும் மின் உற்பத்தியில் ஏற்படும் நட்டத்தை மக்கள் மீது சுமத்த முயற்சிக்கப்படுவதாகவும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
மன்னிப்பு கேட்ட குணசேகரன்.. அதிர்ச்சியில் ஜனனி.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? News Lankasri