மட்டக்களப்பில் நினைவுகூரப்பட்ட சுவாமி விபுலானந்தரின் 76 வது சிரார்த்த தினம்
உலகின் முதல் தமிழ் பேராசிரியர் என்ற பெருமையினைக்கொண்ட சுவாமி விபுலானந்தரின் 76வது சிரார்த்த தினமும் சிவனந்தா தேசிய பாடசாலையின் ஸ்தாபக தினமும் மட்டக்களப்பு கல்லடியில் உள்ள அன்னாரின் சமாதியில் நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு இன்று (19.07.2023) காலை சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டுச்சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது.
இதனையொட்டி சிரார்த்த தின நிகழ்வும் சுவாமி விபுலானந்தரின் சிரார்த்த தின ஊர்வலமும் நடைபெற்றது.
சமாதிக்கு மலர் தூவி வணக்கம்
இந்த நிகழ்வில் விபுலானந்தரின் வெள்ளை நிற மல்லிகையோ பாடல் பாடப்பட்டதை
தொடர்ந்து சமாதிக்கு சுவாமியால் மாலை அணிவிக்கப்பட்டு வழிபாடுகள்
முன்னெடுக்கப்பட்டன.
அதனை தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் சமாதிக்கு மலர் தூவி வணக்கம் செலுத்தியதுடன் வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.
வழிபாடுகளை தொடர்ந்து சுவாமி விபுலானந்தரின் திருவுருவம் தாங்கிய பதாகைகள் மற்றும் சிலைகளுடன் சிவானந்தா தேசிய பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவக மாணவர்கள், விரிவுரையாளர்கள் இணைந்து இனிய இசையுடன் மாபெரும் ஊர்வலம் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |