மீண்டும் சேவையில் ஈடுபட்டுள்ள 76 வாகனங்கள்
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோவின் அறிவுறுத்தலின் பேரில், இலங்கை இராணுவம் முன்னர் பயன்படுத்த முடியாத 76 வாகனங்களை புதுப்பித்து மீண்டும் சேவையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த வாகனங்கள் பாரவூர்திகள், பேருந்துகள், தண்ணீர் பவுசர்கள் உட்பட்ட வாகனங்களே, இராணுவத்தின் மின் மற்றும் இயந்திர பொறியாளர் படையினரால் பழுதுபார்க்கப்பட்டுள்ளன.
வாகனங்களை வாடகைக்கு எடுப்பதற்கு
இந்த முயற்சி, புதிய இறக்குமதிகளைத் தவிர்ப்பதன் மூலம் இராணுவத்திற்கு கணிசமான அளவு அந்நியச் செலாவணியைச் சேமிக்க உதவுகிறது.

இந்த நிலையில், இராணுவத்தின் அறிக்கையின் படி இந்த வாகனங்களை மீண்டும் பயன்படுத்துவதன் மூலம் ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ. 10 மில்லியன் சேமிக்கப்படும் என தெரிவிக்கப்பட் டுள்ளது.
அத்துடன், வெளிப்புற மூலங்களிலிருந்து வாகனங்களை வாடகைக்கு எடுப்பதற்கு செலவிடப்படும். சேமிப்பு இப்போது இராணுவ மேம்பாடு மற்றும் தேசிய முன்னேற்றத்திற்கு திருப்பி விடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இன்னும் 4 நாட்களில் எதிர்பாராத அளவு செல்வத்தை கொடுக்கும் சுக்கிரன் பெயர்ச்சி- உங்களுக்கும் லக் இருக்கா? Manithan