நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள 75வது சுதந்திர தின நிகழ்வுகள் (photos)
இலங்கையின் 75வது சுதந்திர தின நிகழ்வின் வடக்கு மாகாண மட்ட நிகழ்வு யாழ்ப்பாணம் துரையப்பா மைதானத்தில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இன்று (04.02.2023) இடம்பெற்ற 75வது தேசிய சுதந்திர தின நிகழ்வில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரால் தேசிய கொடி ஏற்றப்பட்டது.
தொடர்ந்து பாடசாலை மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றுள்ள நிலையில் மத தலைவர்களின் ஆசியுரையும் சுதந்திர தின நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் யாழ்.மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், மாகாண திணைக்களங்களின் தலைவர்கள் பொலிஸ் மற்றும் முப்படைகளின் உயரதிகாரிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இலங்கையின் 75வது சுதந்திர தினம் நிகழ்வுகள் நெல்லியடி கொலியன்ஸ் விளையாட்டு மைதானத்திலும் இடம்பெற்றுள்ளன.
செய்தி: எரிமலை
கல்முனை
இலங்கையின் 75 வது சுதந்திரதின நிகழ்வு இன்று கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம் தலைமையில் இன்று (04.02.2023) சுதந்திரதின நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது.
இதன்போது பிரதிக் கல்விப் பணிப்பாளர், நிருவாக உத்தியோகத்தர் மற்றும் காரியாலய உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையிலும் சுதந்திர தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் கீழ் மர நடுகை நிகழ்வு இடம்பெற்றதுடன் சமாதான புறாவும் பறக்கவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி: பாரூக் ஷிஹான்
கிளிநொச்சி
75வது சுதந்திர தின நிகழ்வுகள் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் பொது இடங்கள், கிளிநொச்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தேசியக்கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தின் அரச திணைக்களங்களில் தேசிய கொடியும் இதன்போது ஏற்றப்பட்டுள்ளது.
இதேவேளை மரக்கன்றுகள் நாட்டப்பட்டதுடன், துப்பரவாக்கும் பணிகளும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி: எரிமலை
வவுனியா
சுதந்திர தினத்திற்கு ஆதரவு தெரிவித்து வன்னி மக்கள் ஒன்றியத்தினால் வாகன பேரணியொன்று இன்று (04.02.2023 ) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பெருமளவான பகுதிகளில் இலங்கையில் 75வது சுதந்திர தின நிகழ்வுகள் புறக்கணிக்கப்பட்டு பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுவதுடன் கறுப்பு கொடிகளையும் கட்டி தமது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.
இதன்போது சுதந்திர தினத்திற்கு ஆதரவாக இவ்வாகனப் பேரணியும் முன்னெடுக்கப்பட்டது.
அனைத்து வாகனங்களிலும் தேசியக்கொடிகள் கட்டப்பட்டு வாகனப்பேரணி வவுனியா நகரை வலம் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வவுனியா நகரசபை மைதானத்திலும் சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.ஏ.சரத் சந்திர தலைமையில் இந்நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
இதன்போது தேசிய கொடியை பிரதம விருந்தினர் ஏற்றி வைத்ததனை தொடர்ந்து சிங்களம் மற்றும் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் பாடப்பட்டது.
இந்நிலையில் வவுனியா மாவட்ட செயலக வாயிலில் அமைந்துள்ள பண்டாரவன்னியன் நினைவுத் தூபிக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மலர்மாலை அணிவிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் வவுனியா பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் பிரியதர்ஷினி
சஜீவன் மற்றும் கிராம அலுவலர்கள், வவுனியா பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என
பலரும் கலந்து கொண்டு மலர்மாலை அணிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி: ஷான், திலீபன்
மன்னார்
மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் இன்று (4.02.2023) 75வது சுதந்திர தின நிகழ்வு கொண்டாடப்பட்டது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தலைமையில் குறித்த நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் மன்னார் பிரதான பாலத்தில் சுதந்திர தின பேரணியொன்றும் ஆரம்பமாகியுள்ளது.
குறித்த பேரணியில் பொலிஸார், பாடசாலை மாணவர்கள், திணைக்கள தலைவர்கள் மற்றும் பணியாளர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி: ஆஷிக்
மட்டக்களப்பு
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 75வது தேசிய சுதந்திர தின நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இன்று (04.02.2023) வெபர் மைதானத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் அதிதிகள் வரவேற்கப்பட்டு தொடர்ந்து மாவட்ட செயலாளரினால் தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு - மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலகத்தில் சுதந்திர நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
பிரதேச செயலாளர் சத்தியானந்தி நமசிவாயகத்தின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
செய்தி: ருஷாந்தன்










இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
