யாழில் மேலும் 75 பேருக்கு கோவிட் தொற்று உறுதி
யாழ்ப்பாணத்தில் 75 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 119 பேர் கோவிட் வைரஸ் தொற்றாளர்களாக நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை ஆய்வுக்கூடத்தில் 373 பேரின் மாதிரிகள் நேற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் 90 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ். மாவட்டத்தில், யாழ். போதனா மருத்துவமனையில் 20 பேரும், பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் 12 பேரும், சாவகச்சேரி மருத்துவ அதிகாரி பிரிவில் 7 பேரும், சங்கானை பிரதேச மருத்துவமனையில் மூவரும், தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் இருவரும், சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் இருவரும், நொதேர்ன் தனியார் மருத்துவமனையில் ஒருவருமாக 47 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில், கிளிநொச்சி பொது மருத்துவமனையில் 13 பேரும், பளை பிரதேச மருத்துவமனையில் 6 பேரும், அக்கராயன்குளம் பிரதேச மருத்துவமனையில் ஒருவருமென 20 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
மன்னார் பொது மருத்துவமனையில் 12 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டத்தில், பொது மருத்துவமனையில் ஒருவர், நெடுங்கேணி பிரதேச மருத்துவமனையில் மூவர், செட்டிக்குளம் பிரதேச மருத்துவமனையில் இருவர் என 6 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் பொது மருத்துவமனையில் மூவர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். தவிர, வசாவிளான் தனிமைப்படுத்தல் முகாமில் ஒருவருக்கும், காங்கேசன்துறை கடற்படையில் ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஆய்வகத்தில் 170 மாதிரிகள் பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் வடக்கைச் சேர்ந்த 14 பேர் உட்பட 18 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம், யாழ். மாவட்டத்தில் நல்லூர் மருத்துவ அதிகாரி பிரிவில் 8 பேருக்கும், உடுவில் மருத்துவ அதிகாரி பிரிவில் 3 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்தில் பளை மருத்துவ அதிகாரி பிரிவில் 3 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
தவிர, இரணைமடு தனிமைப்படுத்தல் முகாமில் 3 பேருக்கும், முழங்காவில் கடற்படையைச் சேர்ந்த ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, சாவகச்சேரி மருத்துவ அதிகாரி பிரிவில் நேற்று நடத்தப்பட்ட எழுமாறான அன்ரிஜன் பரிசோதனையில் 17 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




