கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு 7.2 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு
கடந்த காலங்களில், கிழக்கு மாகாணத்திற்கு ஆகக்கூடியது ஒரு வருடத்தில் 2.5 பில்லியன் ரூபா நிதிதான் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த வருடத்தில் மாத்திரம் 7.2 பில்லியன் ரூபா நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளதுஒப்பீட்டு ரீதியாக இது மூன்று மடங்கு அதிகமாகும் என வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
திருகோணமலை, தோப்பூர் -பாலத்தோப்பூர் மையவாடி வீதியை காபட் வீதியாக புனரமைப்பதற்கான வேலைகள் நேற்றுமுன்தினம் (16) மாலை, பிரதி அமைச்சர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்தலால் ரத்னசேகர ஆகியோரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
பில்லியன் ரூபா நிதி
கிராமிய வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ், 750 மீற்றர் நீளமுள்ள இவ் வீதியானது 2 கோடியே 17 இலட்சம் ரூபாய் செலவில் காபட் வீதியாக புனரமைப்புச் செய்யப்படவுள்ளதுஇதனை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பிரதி அமைச்சர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
இன்றைய தினம், திருகோணமலை மாவட்டத்தில் மாத்திரம், ஆறு கிராமிய வீதி அபிவிருத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கின்றது.
இதன்மூலம், கிழக்கு மாகாணம் அபிவிருத்தியில் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. எதிர்காலத்தில் இந்த நிலை, இன்னும் வேகமாக வளர்ச்சி அடையும்.
அவர்களைக் கேட்காமல், ஒரு செங்கல்லை கூட, எங்களால் நட முடியாது என ஒரு சாரார் சொல்லி வந்தனர். இன்னும் ஒரு புறத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முஸ்லிம் சமூகத்துக்கு எதிரானது என்றும், இதன் காரணமாக முஸ்லிம் பிரதேசங்கள் எந்த வகையிலும் அபிவிருத்தி அடைய மாட்டாது எனவும் பல போலி பிரச்சாரங்களையும் இன்னுமொரு சாரார் தெரிவித்து வந்தனர்.
ஆனால் இப்போது அவர்களுடைய அரசியல் காழ்ப்புணர்ச்சிகள் அனைத்தும் சுக்குநூறாக்கப்பட்டுள்ளது. மக்கள் எமக்கு வழங்கிய ஆதரவுக்காக, அதன் பிரதி பலனை தற்போது அனுபவிக்க ஆரம்பித்துள்ளனர்.
கடந்த காலங்களைப் போன்று, வீதிக்கு ஒரு நட்டிவிட்டு, அரசியல்வாதிகளின் புகைப்படங்களை போட்டு மக்களுக்கு படம் காட்டும் கலாச்சாரங்கள் தற்போது இல்லை. ஜனாதிபதி பதவியேற்று தற்போது ஒரு வருடமாகின்றது.
வங்ரோத்து அடைந்த நாடு
அரசாங்கம் பதவியேற்று பத்து மாதங்களே ஆகின்றன. இருந்தும் இந்த காலத்தில், சீர்கேட்டிருந்த அரசு நிர்வாகங்களை ஒழுங்கு படுத்துவதில் அதிக பகுதியை செலவிட்டிருக்கின்றோம். இதன் காரணமாக வங்ரோத்து அடைந்த நாடு என்ற நிலையிலிருந்து மீண்டு, தற்போது படிப்படியாக நாடு முன்னோக்கி சென்று கொண்டிருக்கின்றது.
நாங்கள் ஏற்படுத்திய புதிய அரசியல் கலாச்சாரம் காரணமாக, சுங்கத்தினைகளத்தினதும் வருமான வரி திணைக்களத்தினதும், இலக்கினை விட, அதிக வருமானத்தை தற்போது ஈட்டி வருகின்றன மறுபுறம் அன்னிய செலவாணி மிக வேகமாக நாட்டுக்கு வந்து கொண்டிருக்கின்றது. அத்தோடு ஊழலும் வீண்விரயமும், இல்லாத நாட்டை தேடி, அதிக முதலீடுகளும் வந்து கொண்டிருக்கின்றன.
அரசாங்கத்தின் வருமானம் அனைத்தும், இன, மத, பிரதேச, அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால், இந்த நாட்டு மக்களை சென்றடை வேண்டும் என்பதில் ஜனாதிபதி உறுதியாக இருக்கின்றார். தற்போது, நாட்டையும் நாட்டு மக்களையும் சீரழித்து வருகின்ற, போதைப் பொருள் ஆதிக்கத்தை, ஒரு குறுகிய காலத்துக்குள், முழுமையாக ஒலித்துக் கட்டுவோம். அதற்கான சகல நடவடிக்கைகளையும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஒரு காலத்தில், வான் வழியாகவும் கடல் மார்க்கமாகவுமே போதை பொருள் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஆனால், கடந்த அரசாங்கங்களின் அரசியல் கலாச்சாரங்கள் காரணமாக, இந்த நாட்டுக்குள்ளே போதை பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன.
அரசியல் கலாச்சாரம்
இதற்குப் பின்னணியில் இருந்த அனைத்து அரசியல்வாதிகள் தொடர்பாகவும் தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முன்னாள் பொலிஸ் மா அதிபர் கூட போதைப் பொருள் கடத்துகின்ற அரசியல்வாதிகளோடு சம்பந்தப்பட்டிருக்கிறார்.
இதனால் அவர் பதவி நீக்கமும் செய்யப்பட்டிருக்கிறார். இப்படி ஒரு மோசமான அரசியல் கலாச்சாரம் இருந்ததையிட்டு, இந்த நாட்டு மக்கள் வெட்கப்பட வேண்டியவர்களாக இருக்கின்றனர்.
எனவே, தற்போது அரசியல் மயப்படுத்தப்பட்ட, அனைத்து நிர்வாக நடவடிக்களில் இருந்தும் ஒட்டுமொத்தமாக நாட்டை காப்பாற்றியிருக்கிறோம். கடந்த காலங்களில், குற்றவாளிகளை விட, விசாரணை மேற்கொண்டோர் அஞ்சி வாழ்ந்த நிலையை தற்போது மாற்றி அமைத்திருக்கிறோம்.
எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில், தோப்பூர் பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 2 மணி நேரம் முன்

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
