நாடளாவிய ரீதியில் 716 பேர் கைது!
நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது 716 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறித்துள்ளது.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(30.1.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, 317 கிராம் ஹெரோயின், 518 கிராம் ஐஸ், 02 கிலோகிராம் 664 கிராம் கஞ்சா, 168,313 கஞ்சா செடிகள், 15 கிராம் குஷ்ரக போதைப்பொருள், 63 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 164 போதை மாத்திரைகள், 92 கிராம் 999 மில்லிகிராம் மதனமோதகம் மற்றும் 02 கிலோகிராம் 171 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
விசாரணை
அதேநேரம், குறித்த போதைப்பொருட்களுடன் தொடர்புடைய 716 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 15 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளுக்கமைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், 718 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், 05 பேர் மறுவாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.