அரசாங்கம் முகத்தில் கரியை பூசிக் கொண்டுள்ளது – மனோ குற்றச்சாட்டு
அரசாங்கம் முகத்தில் கரியை பூசிக்கொண்டு உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
நிலக்கரியின் நிறம் என்ன? அது கருமை நிறம் அந்த நிறத்தை அரசாங்கம் முகத்தில் பூசிக்கொண்டு உள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிலக்கரி கொள்வனவு விவகாரத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சிக்கியுள்ளது என குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த நிலக்கரி இறக்குமதி நடவடிக்கையில் பாரிய மோசடி இடம் பெற்றுள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது, இதனை யாரும் மறுக்க முடியாது இது அனைவரும் அறிந்த விடயமே என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தரம் குறைந்த நிலக்கரி என்பதால் அதன் உற்பத்தி திறன் குறைவு எனவும் அதனால் கூடுதல் அளவில் எரிசக்தியை கொள்வனவு செய்ய நேரிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிலக்கரி கொள்வனவில் சுமார் 700 கோடி ரூபா ஊழல் இடம்பெற்றுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
நிலக்கரி இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட நிறுவனம் அரசாங்கத்திற்கு நெருக்கமான நிறுவனமாக இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
700 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டிருக்கும் நிலையில் அதனை மோசடி என்று சொல்லாமல் வேறு எவ்வாறு சொல்வது? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கைக்கு அரிசி வழங்கும் நடவடிக்கையின் போது கருப்பு பட்டியலிடப்பட்ட நிறுவனம் ஒன்றிற்கு இந்த நிலக்கரி இறக்குமதி செய்வதற்காக சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது எனவும் இது மோசடி என்று கூறுவதைத் தவிர வேறு எவ்வாறு கூறுவது என அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
அவர்களது அகராதியில் ஊழல் என்பதற்கு வேறு ஏதும் அர்த்தம் உள்ளதா என்று எனக்கு தெரியவில்லை என மனோ கணேசன் நகைச்சுவையாக ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 16 மணி நேரம் முன்
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
ட்ரெண்டிங் 'முட்ட கலக்கி' பாடலுக்கு நடனமாடிய எதிர்நீச்சல் சீரியல் பிரபலங்கள்.. வீடியோ இதோ Cineulagam