ஆயிரக்கணக்கான தனியார் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை - செய்திகளின் தொகுப்பு (Video)
தனியார் துறை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிலையங்களில் இருந்து எட்டு மாதங்களாக பெறப்பட்ட மின்சாரத்திற்காக செலுத்த வேண்டிய 23 பில்லியன் ரூபாவை இலங்கை மின்சார சபை செலுத்த தவறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை மின்சார சபை தேசிய மின்கட்டமைப்பிற்கு வழங்கப்படும் மின்சாரத்திற்கான கட்டணத்தை செலுத்த தவறியதன் காரணமாக சிறிய மின் உற்பத்தி நிலையங்கள், சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் காற்றாலைகள் மூடப்படுவதாக உள்ளுர் எரிசக்தி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையின் கடனை செலுத்தத் தவறியமையினால் தனியார் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நிலையங்களில் பணிபுரியும் சுமார் 7000 ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் உள்ளூர் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ருவன் பிரசங்க தெரிவித்துள்ளார்.
இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய செய்திகளுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,

பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு - க்வார் அணையை முடிக்க இந்தியா ரூ.3,119 கோடி கடன் பெற முடிவு News Lankasri

உலகின் பணக்கார குடும்பம் இதுதான்; மொத்தம் 15,000 உறுப்பினர்கள் - செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri

மஹிந்திரா நிறுவனம் தயாரிக்கவுள்ள Rare Earth Magnets - சீனாவிற்கு எதிரான இந்தியாவின் தற்சார்பு முயற்சி News Lankasri
