இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள புதிய பேருந்துகள்
இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பேருந்துக் குழுமத்தைப் பலப்படுத்தும் பொருட்டு, இந்த ஆண்டு இறுதிக்குள் 700 புதிய பேருந்துகள் இறக்குமதி செய்யப்படவுள்ளது.
அதிவேக நெடுஞ்சாலை சேவைகளுக்காக 200 சொகுசுப் பேருந்துகளும், சாதாரண வீதிப் போக்குவரத்துகளுக்காக 400 சாதாரணப் பேருந்துகளும் இறக்குமதி செய்யப்படவுள்ளது.
பேருந்து இறக்குமதி
குறித்த பேருந்துகள் இந்த ஆண்டு இறுதிக்குள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ளது.
இதற்கிடையே குறித்த பேருந்து தொகுதியில் இருந்து 104 மெட்ரோ பேருந்துகள் ஏற்கனவே கப்பலில் ஏற்றப்பட்டுவிட்டதாகவும், அவை எதிர்வரும் ஆகஸ்ட் 15ஆம் திகதிக்குள் இலங்கையை வந்தடையும் என்றும் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் வழக்கமான சாதாரண வீதிகள் இரண்டிலும் பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்வதையும், மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தும் நோக்கிலும் இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பேருந்துக் குழுமத்தை நவீனமயமாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு குறித்த பேருந்துகள் இறக்குமதி செய்யப்படுவதாக போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது.