வங்கிச் சேவைகளைப் பயன்படுத்தாத பெண்கள்:உலக வங்கியின் அதிர்ச்சித் தகவல்
உலகளவில் 700 மில்லியன் பெண்கள் இன்னும் வங்கிச் சேவைகளைப் பயன்படுத்தாமல் உள்ளனர் என உலக வங்கியின் குளோபல் பிண்டெக்ஸ் 2025 (Global Findex 2025) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கிக் கணக்குகள், டிஜிட்டல் பணம் செலுத்துதல் மற்றும் கையடக்க தொலைபேசி பணச் சேவைகள் ஆகியவற்றுக்கான அணுகல் அற்றவர்களாகவும் உள்ளனர்.
குளோபல் அறிக்கை
ஆனால், 2024 ஆம் ஆண்டளவில், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் 73 சதவீத பெண்கள் வங்கிக் கணக்குகளை வைத்திருக்கவில்லை.இது 2021 ஆம் ஆண்டை விட ஏழு சதவீதம் அதிகம் என்று அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் சுமார் 36 சதவீத பெண்கள் முறையாகச் சேமிப்பு வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்துகின்றனர். இது 2021 ஐ விட 22 சதவீத குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகும்.

மேலும், அந்த நாடுகளில் டிஜிட்டல் பணம் கொக்கல், வாங்கல் நடவடிக்கைகளில் பெண்கள் 50 சதவீதத்திலிருந்து 58 சதவீதமாக அதிகரித்துள்ளனர்.
இதற்கிடையில், இலங்கையில் 15 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 80.2 சதவீதம் பேர் வங்கிக் கணக்குகளை வைத்திருக்கிறார்கள் என தெரியவந்துள்ளது.அது 2024 ஆம் ஆண்டுக்கான கணிப்பீடாகும்.