மட்டக்களப்பில் கடந்த மாதம் மாத்திரம் 700 மாடுகள் நோயினால் இறந்துள்ளன - கால்நடை பண்ணையாளர்கள் (Photo)

Sri Lanka
By Kumar Nov 02, 2022 05:15 AM GMT
Report

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நோய் தாக்கம் காரணமாக 700க்கும் அதிகமான மாடுகள் இறந்துள்ளதாக கால்நடை பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கால்நடைகள் இறப்பது குறித்து நேற்று (01.11.2022) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு வருகைதந்து மாவட்ட உதவி அரசாங்க அதிபருடன் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.

கால்நடை வளர்ப்பு மற்றும் கமநல அமைப்பு 

மட்டக்களப்பில் கடந்த மாதம் மாத்திரம் 700 மாடுகள் நோயினால் இறந்துள்ளன - கால்நடை பண்ணையாளர்கள் (Photo) | 700 Cows Die Of Disease In Batticaloa Last Month

மட்டக்களப்பு சர்வமத பேரவை மற்றும் மயிலத்தமடு, மாதவனை கால்நடை வளர்ப்பு கமநல அமைப்பு ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த சந்திப்பினை மேற்கொண்டது.

மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் நவேஸ்வரனை சந்தித்த குழுவினர் அண்மைக்காலமாக கிரான் மற்றும் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மாடுகள் திடீரென இறப்பது குறித்து கலந்துரையாடப்பட்டது.

மயிலத்தமடு,மாதவனை கால்நடை வளர்ப்பு கமநல அமைப்பின் தலைவர் எஸ்.நிமலன், மட்டக்களப்பு சர்வமத பேரவை தலைவர் த.மனோகரன் உட்பட கால்நடை பண்ணையாளர்கள், சர்வமத பேரவையின் உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

அத்துடன் இவ்வாறு கால்நடைகள் உயிரிழக்கும்போது அரச கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகம் முறையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லையென பண்ணையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பில் கடந்த மாதம் மாத்திரம் 700 மாடுகள் நோயினால் இறந்துள்ளன - கால்நடை பண்ணையாளர்கள் (Photo) | 700 Cows Die Of Disease In Batticaloa Last Month

700 மாடுகளின் இறப்பினை தடுத்திருக்கலாம்

கடந்த 09 தினங்களுக்குள் 200மாடுகள் உயிரிழந்துள்ளதாகவும் ஏற்கனவே இதற்கான தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருந்தால் மாடுகள் இறப்பதை தவிர்த்திருக்கமுடியும் எனவும் மயிலத்தமடு,மாதவனை கால்நடை வளர்ப்பு கமநல அமைப்பின் தலைவர் எஸ்.நிமலன் தெரிவித்தார்.

அரச கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகம் இது தொடர்பில் உடல்கூறுகளைப்பெற்றுச்சென்று ஒன்பது தினங்களை கடந்துள்ள நிலையிலும் இதுவரையில் அது தொடர்பில் முறையான நடவடிக்கையெடுக்கவில்லையெனவும் நேற்றை தினம் மாடுகளுக்கு தொண்டையடைப்பான நோய் என மருந்துவழங்குவதாகவும் இதனை முன்பே செய்திருந்தால் 700மாடுகளின் இறப்பினை தடுத்திருக்கமுடியும் எனவும் கால்நடை பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அரச கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் சில மருந்துகள் தனியார் நிலையங்களில் கொள்வனவு செய்யுமாறு பணிக்கப்பட்ட நிலையில் அதிக விலைகள் கொடுத்து அந்த மருந்துகளை பெற்று மாடுகளுக்கு வழங்கியபோதும் அவை பலனளிக்கவில்லையெனவும் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

மக்களின் கோரிக்கை

வீடுகளில் வளர்க்கப்படும் மாடுகளுக்கு மட்டுமே காப்புறுதி செய்யப்படுவதாகவும் மேய்ச்சல் தரைகளில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு காப்புறுதி செய்யப்படாத காரணத்தினால் இழப்பீடுகளைப்பெற்றுக்கொள்ளமுடியாத நிலை காணப்படுவதாகவும் கால்நடை பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அரச கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஊடாக கால்நடைக்கான மருந்துகளைப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் என்பதுடன் உயிரிழந்த மாடுகளுக்கான நஷ்டயீடுகளைப் பெற்றுத்தர நடடிக்கையெடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

மட்டக்களப்பில் கடந்த மாதம் மாத்திரம் 700 மாடுகள் நோயினால் இறந்துள்ளன - கால்நடை பண்ணையாளர்கள் (Photo) | 700 Cows Die Of Disease In Batticaloa Last Month

ஒரு மாடு சுமார் ஒன்றரை இலட்சம் ரூபாவுக்கு மேல் பெறுமதியானதாகவும் சுமார் 700 மாடுகள் இறந்த காரணத்தினால் கால்நடை வளர்ப்பாளர்கள் பாரிய நஷடத்தினை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தனர்.

இது தொடர்பிலான மனு ஒன்றும் மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் நவேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டது.

GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், உரும்பிராய், கொழும்பு, India, England, United Kingdom

02 Aug, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Oberhausen, Germany

21 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டைப்பிராய், கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada, Montreal, Canada

06 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Scarborough, Canada

23 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
மரண அறிவித்தல்

மூதூர், உடுப்பிட்டி, தலைமன்னார், கொழும்பு, சாவகச்சேரி, Scarborough, Canada

23 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொழும்பு, Toronto, Canada

25 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தம்பாலை, கொழும்பு

04 Sep, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US