யாழ்ப்பாணத்தில் 70 வயதில் முதுநிலை பட்டம் பெற்ற முதியவர் - பாராட்டும் தென்னிலங்கை மக்கள்
யாழில் 70 வயதில் நபர் ஒருவர் முதுநிலை பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார். இதற்கு பெரும்பான்மையான சிங்கள மக்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் தனது 70வது வயதில் பட்டம் பெற்றதனை அவரது மகன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“எனது தந்தை தனது 70வது வயதில் M.P.A பட்டம் பெற்றுள்ளார்” என மகன் பதிவிட்டுள்ளார்.
வைத்தியரான மகனின் பேஸ்புக் பக்க பதிவை சிங்கள பேஸ்புக் பக்கங்கள் மீள் பதிவு செய்து வெளியிட்டுள்ளன. அத்துடன் கல்விக்கு வயதில்லை என்பதனை அவர் உண்மையாக்கியுள்ளார் என பலரும் 70 வயதான அவரை பாராட்டியுள்ளனர்.
எனினும் இந்த கற்கையின் பெறுமதியை இன்றைய காலப்பகுதியினர் மதிக்காமல் பணம் செலுத்தி பட்டங்களை பெற்றுக் கொள்வதாக பலரும் குறிப்பிட்டுள்ளனர்.
அதன் மதிப்பை உணர்ந்தவர் வயதை பொருட்படுத்தாமல் சாதித்து காட்டியுள்ளார் என பேஸ்புக் பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.

 
                                            
                                                                                                                                     
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    சக்திக்கு வைத்த செக், தர்ஷனுக்கு ஷாக் கொடுத்த குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        