ஒரே நாளில் பல லட்சங்களை இழந்த இலங்கை!
ரயில் நிலையப் பொறுப்பதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்கப் போராட்டத்தினால் 70 லட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரயில் நிலையப் பொறுப்பதிகாரிகளின் திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தினால் ஒரே நாளில் புகையிரத திணைக்களத்திற்கு 70 லட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது என திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
பயணிகளையும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கி இவ்வாறு திடீர் தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுப்பது எந்த வகையிலும் நியாயமற்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தொழிற்சங்கப் போராட்டம் குறித்து ரயில் நிலையப் பொறுப்பதிகாரிகள் எந்தவிதமான முன் அறிவித்தலையும் வழங்கவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
போராட்டம் முன்னெடுப்பதற்கு அரை மணித்தியாலத்திற்கு முன்னரே இது குறித்து அறிவிக்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து வெளியேறியுள்ள கனி மொத்தமாக வாங்கிய சம்பளம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam