வவுனியாவில் பேருந்து மோதி 7 வயது சிறுவன் மரணம்
வவுனியா(Vavuniya), பாவற்குளம் பகுதியில் சைக்கிள் ஒன்றின் மீது தனியார் பேருந்து மோதியதில் 7 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது,நேற்று (31) மாலை இடம்பெற்றுள்ளது.
7 வயது சிறுவன்
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, பாவற்குளம், படிவம் 2 பகுதியில் பேருந்து சாரதி பேருந்தை நிறுத்தி விட்டு மீண்டும் சேவையில் ஈடுபடுவதற்காக பேருந்தை செலுத்தியுள்ளார்.
அப்போது, சைக்கிளில் பயணித்த இரண்டு சிறுவர்கள் வீதியை கடக்க முற்பட்டபோது பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்கள்.
இதில் சைக்கிளில் பயணித்த 7 வயதுடைய அப்துல் மஜித் உமர் என்ற சிறுவன் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் உளுக்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
உயிரிழந்த சிறுவனின் சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |