வடக்கு கிழக்கு பொது நிர்வாக முடக்கத்திற்கு 7 தமிழ் கட்சிகள் அழைப்பு
எதிர்வரும் (25.04.2023) ஆம் திகதி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பொது நிர்வாக முடக்க போராட்டத்திற்கு 7 தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து அழைப்பு விடுத்துள்ளன.
இன்றைய தினம்(22.04.2023) தனியார் விடுதியில் இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே இவ்விடயம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கில் பௌத்த, சிங்கள இராணுவமயமாக்கும் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராகவும், புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராகவும் இந்த நிர்வாக முடக்க போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த ஊடக சந்திப்பில் இலங்கை தமிழரசிக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா,
தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன், புளொட் தலைவர் சித்தார்த்தன்,
ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஸ்பிரேமச்சந்திரன், தமிழ் தேசியக் கட்சியின்
தலைவர் சிறீகாந்தா, டெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன், ஜனநாயகப் போராளிகள்
கட்சியின் தலைவர் வேந்தன் ஆகியோர் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
குணசேகரன் அடுத்த திட்டம், மதிவதனியை பார்க்க வந்த ராணா... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam