சிலி நாட்டில் கோர விபத்து - 7 பேர் பலி
தென் அமெரிக்காவில் அமைந்துள்ள சிலி நாட்டின் கான்செப்சியொன் மாகாணம் சன் பெட்ரொ டிலா பாஹ நகரின் அருகே பேருந்து மீது தொடருந்து மோதி கோர விபத்தொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விபத்தானது நேற்று(01.02.2023) இரவு இடம்பெற்றுள்ளது.
சன் பெட்ரொ டிலா பாஹ நகரின் அருகே உள்ள தொடருந்து தண்டவாளத்தை பேருந்து கடக்க முயற்சித்த போது வேகமாக வந்த தொடருந்து பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
பொலிஸ் விசாரணை
இந்நிலையில் 14 பயணிகளுடன் சென்ற பேருந்தில், விபத்தில் சிக்கி 7 பயணிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும், 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
கல்யாண விஷயத்தில் நிலாவிற்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்திய சோழன்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கான அனைத்து வழிகளையும் மூடியதாக அறிவித்த ஈரான்- பதற்றத்தில் உலகம் News Lankasri