யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்தியகடற்றொழிலாளர்கள் விடுதலை
கடந்த மாதம் 13ம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 07 இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்களையும் நிபந்தனையுடன் விடுதலை செய்ய யாழ். ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த மாதம் ஓகஸ்ட் 13 ஆம் திகதி நெடுந்தீவு அருகே கைது செய்யப்பட்ட 07 தமிழக கடற்றொழிலாளர்களும் நேற்றையதினம்(24) யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்பபடுத்தப்பட்டனர்.
விடுதலை
இதன்போதே அவர்கள் அனைவரும் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டனர்.
6 வருடங்கள் ஒத்திவைக்கப்பட 2 வருட சிறைத்தண்டனை என்ற நிபந்தனையுடன் 7 கடற்றொழிலாளர்களையும் விடுவித்து ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் நளினி சுபாஸ்கரன் உத்தரவிட்டார்.
அத்துடன் ஓகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி நெடுந்தீவு கடலில் மீன்பிடி உபகரணங்கள் ஏதும் இல்லாமல் கைதுசெய்யப்பட்டு ஊர்காவற்றுறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட 4 கடற்றொழிலாளர்களும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.





திருமணத்தில் கடைசி நேரத்தில் வரப்போகும் பெரிய ட்விஸ்ட்.. எதிர்நீச்சல் தொடர்கிறது லேட்டஸ்ட் ப்ரோமோ Cineulagam

உங்கள் குடும்பத்தை பிரித்தானியாவுக்கு அழைத்துக்கொள்ள விரும்புகிறீர்களா? உங்களுக்கு சில முக்கிய தகவல்கள் News Lankasri
