ஏழு துறைசார் மேற்பார்வைக் குழுக்களை நிறுவ நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானம்
பத்தாவது நாடாளுமன்றத்தின் கீழ் ஏழு துறைசார் மேற்பார்வைக் குழுக்களை நிறுவுவதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் குழுவின் கூட்டத்தின் போது, ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளது.
அதில் மூன்று குழுத் தலைவர் பதவிகள் எதிர்க்கட்சிக்கும், நான்கு குழுத் தலைவர் பதவிகள் அரசாங்கத்திற்கும் ஒதுக்கப்பட்டதாக, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.
குழு நியமனம்
2025, பெப்ரவரி 27 அன்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் குழுவின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுகத் வசந்த டி சில்வா மற்றும் டாக்டர் பத்மநாதன் சத்தியலிங்கம் ஆகியோரின் கோரிக்கையைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான நாடாளுமன்றக் குழுவை நிறுவுவதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் குழு ஒப்புதல் அளித்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி: அநுர அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன...! 10 மணி நேரம் முன்

முகேஷ் அம்பானியை விட ஒரு காலத்தில் பெரும் கோடீஸ்வரராக இருந்தவர்... இன்று வாடகை குடியிருப்பில் News Lankasri
