கிண்ணியா - கொழும்பு வீதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் 68 வயதான வயோதிபர் உயிரிழப்பு
கிண்ணியா - கொழும்பு வீதியில் முனைசேனை என்ற இடத்தில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தொன்றில் 68 வயதான வயோதிபர் அதே இடத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
கிண்ணியா வில்வெளி பிரதேசத்தைச் சேர்ந்த சேர்ந்த 68 வயதான டெயிலர் நசீம் என்பவரே இவ்வாறு பலியானவர் ஆவார். கிண்ணியாவில் இருந்து இவர் சிறியரக மோட்டார் சைக்கிள் ஒன்றில் வில்வெளியில் உள்ள தனது வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த டிப்பர் வாகனமொன்று மோதி விபத்துக்குள்ளானதில் இவர் பலியானதாகக் கிண்ணியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சடலம் கிண்ணியா வைத்தியசாலையிலிருந்து பிரேதப் பரிசோதனைக்காகத் திருகோணமலை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan