தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறிய கைதானவர்களின் எண்ணிக்கை உயர்வு
நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 670 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 43 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 68 ஆயிரத்து 649 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, நேற்றுமுன்தினம் தனிமைப்படுத்தல் சட்டதிவிமுறைகளை மீறி மேல் மாகாணத்துக்குள் உட்பிரவேசிக்க மற்றும் வெளியேற முற்பட்ட 184 வாகனங்களில் வந்த 238 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்துக்கு உட்பிரவேசிக்கும் மற்றும் வெளியேறும் 13 இடங்களில் நேற்றுமுன்தினம் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது 1414 வாகனங்களில் வந்த 2 ஆயிரத்து 41 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
டிசம்பர் மாத சிறப்பு பலன்கள்: நான்காம் இடத்தில் உச்சம் பெறும் குரு! மேஷத்துக்கு ஜாக்பாட் உறுதி Manithan