கிளிநொச்சி மாவட்டத்தில் 635 குடும்பங்களை சேர்ந்த 2108 பேர் பாதிப்பு
கிளிநொச்சி மாவட்டத்தில் 635 குடும்பங்களை சேர்ந்த 2108 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, 15 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த புள்ளி விபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று காலை 11 மணி வரை திரட்டப்பட்ட புள்ளி விபரங்களின் அடிப்படையில் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 262 குடும்பங்களை சேர்ந்த 935 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 13 தற்காலிக வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 91 குடும்பங்களை சேர்ந்த 302 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்காலிகாக வீடு ஒன்று சேதமடைந்துள்ளது.
பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் 88 குடும்பங்களை சேர்ந்த 263 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அப்புள்ளி விபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் 194 குடும்பங்களை சேர்ந்த 608 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட இடர் முகாமைத்தவ நிலைய புள்ளி விபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களிற்கான அத்தியாவசிய தேவைகள் குறித்து ஆராய்ந்து பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்தவ நிலையம் தெரிவிக்கின்றது.